Friday, July 30, 2010

30 வெள்ளி ஜூலை 2010

சலிப்பை ஏற்படுத்திய நேற்றைய F&O EXPIRY வர்த்தகம்.தொடர்ந்து இரண்டாவது வாரமாய் குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான நகர்வுகள்.

கீழ் நிலையில் 5350 மேல் நிலையில் 5426 உடை படாதவரை பெரியதொரு வாய்ப்பை எதிர்பார்க்க இயலாது.

இன்று  நேற்றய கீழ் நிலையான 5381 உடைபடாதவரை  5426 to 5454 வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை  

5423--5436--5447--5465--5481

முக்கிய தாங்கு நிலை
5402--5389--5372--5350--5333



Wednesday, July 28, 2010

28 புதன் ஜூலை 2010

இன்றும் நாளையும்  சந்தை அதிக மேடு பள்ளங்களை சந்திக்கும் பெரிதாய் எதிர்பார்க்க எதுவும் இல்லை,தினவர்த்தகர்கள்  கவனத்துடன் செயல்படவும்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5436--5452--5465--5478--5491

முக்கிய தாங்கு நிலை

5423--5407--5391--5372--5350 


Tuesday, July 27, 2010

27 செவ்வாய் ஜூலை 2010

இன்று வெளியாக இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கியின்  வட்டிவிகித அறிவிப்புசந்தையில் பெரியதொரு சலசலப்பை ஏற்ப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.


RELIANCE மற்றும் L&T நிறுவனங்களின் காலண்டுமுடிவுகள் என சந்தையில் பெரிய மேடு பள்ளங்களை உண்டாக்கும் காரணிகள், தினவர்த்தகர்கள் அனைத்து அறிவிப்புகளுக்குப்பின் வர்த்தக முடிவை எடுக்கலாம்.

பேங்க்  நிபிட்டி வர்த்தகர்கள் 9910-- 9827 நிலைகளை கவனத்தில் கொள்ளலாம் .

RELIANCE பங்கு 1032--1020 நிலைகளுக்கு கீழ் நழுவாத வரை மீள முயற்சிக்கும் .

L&T முக்கிய தாங்கு நிலை1882 to 1890


இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5422--5436--5446--5465--5491

முக்கிய தாங்கு நிலை

5390--5372--5361--5350--5333

Monday, July 26, 2010

26 திங்கள் ஜூலை 2010

FNO Expiry வாரம் ..தின வர்த்தகர்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டிய தருணம்.எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் .


நம்பிக்கை அளிக்கும் விதமான அமெரிக்க சந்தையின் ஒருமாத உயர்நிலை இன்று நமது சந்தையில்  5473 to 5481  நிலைகள் முக்கிய தடை நிலையாக செயல்படும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை
5451--5468--5474--5495--5512

முக்கிய தாங்கு நிலை

5434--5418--5402--5378--5350 



Friday, July 23, 2010

23 வெள்ளி ஜூலை

ஒரு வழியாக குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான வர்த்தகத்திலிருந்து மீண்டிருக்கிறது சந்தை.......

இன்று 5489  புள்ளிகளுக்கு மேல் நிலைபெறும் பட்சத்தில் வரும் நாட்களில் கடந்த மாதம் 22  ம் தேதி நாம் குறிப்பிட்டிருந்த 5541 நிலைகளை எட்டிடும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.

கடந்த ஜூன் மாதம் நாம் குறிப்பிட்டிருந்த மிட்கேப்,உலோகத்துறை மற்றும் வங்கித்துறை பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களது லாபங்களின் 
மற்றொரு பகுதியினை இங்கு உறுதி செய்திடலாம் .

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை
5451--5465--5478--5489--5501

முக்கிய தாங்கு நிலை

5432--5423--5416--5408--5392

Thursday, July 22, 2010

22 வியாழன் ஜூலை 2010

5412 அல்லது 5350 நிலைகளுக்கு கீழ் அல்லது மேல் நிலைகளை தாண்டாத வரை சந்தையை பற்றிய பார்வையில் மாற்றம்  ஏதும் இல்லை.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5408--5417--5426--5436-5461 

முக்கிய தாங்கு நிலை

5386--5376--5351--5338--5312




Wednesday, July 21, 2010

21 புதன் ஜூலை 2010

நேற்றைய சந்தையில்5424 நிலைகளை மீள முடியாமல் போனதில் பெருத்த ஏமாற்றமே ,மீண்டும் இன்று 5350 நிலைகளில் நல்லதொரு தாங்கு நிலையாக செயல்படும் வாய்ப்பை எதிர்பார்கிறேன.

இன்று5397 நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் மீண்டும் ஒரு selling pressure உருவாகும் வாய்ப்பு அதிகம் தினவர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும. 

5412 நிலைகளுக்கு மேல் சந்தை முடிவுறும் பட்சத்தில் நல்லதொரு உயர்வுக்கான வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.

இனி இன்றைய சந்தையின் தடை நிலை

5377--5392--5401--5417--5434  

முக்கிய தாங்கு நிலை

5344--5338--5322--5311--5298

Tuesday, July 20, 2010

20 செவ்வாய் ஜூலை 2010

குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான சலிப்பை ஏற்படுத்தும் வர்த்தகம் gapup gapdown என தினவர்த்தகர்களுக்கு வாய்ப்பளிக்காத குறைந்த volume..உடைய வர்த்தகம்.


5424  5433 நிலைகளுக்கு மேல் சந்தை முடிவுறும் பட்சத்தில் மட்டும்  மேல் நோக்கிய நகர்வு சாத்தியப்படும் கீழ் நிலையில் 5360 5350 முக்கிய நிலையாக செயல்படும் வாய்ப்பை எதிர்பார்கிறேன்.

வரும் நாட்களில் 5424 நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் 5266 நிலைகளில் தேங்கும் வாய்ப்பை எதிர்பார்கிறேன்.
 
இனி இன்றைய சந்தையின் தடை நிலை
5398--5412--5424--5434--5451 
 
முக்கிய தாங்கு நிலை
5380--5363--5350--5338--5305 
 

Friday, July 16, 2010

16 வெள்ளி ஜூலை 2010

குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான நேற்றைய வர்த்தகம், தேசிய நிப்ட்டியின்
எரிச்சலூட்டும் வகையிலான 38  புள்ளிகளுக்கு இடையிலான நகர்வுகள்.

இன்றைய சந்தையில் முக்கிய தாங்கு நிலையாக 5342 செயல் படும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன். 5424 நிலைகளுக்கு மேல் சந்தை முடிவுறம் பட்சத்தில் மட்டும் சந்தையின் அடுத்த கட்ட நகர்வு சாத்தியப்படும்..


வாரத்தின் கடைசி வர்த்தகதினம் 5394  நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் ஒரு selling pressure உருவாகும் வாய்ப்பு இருக்கிறது கவனம் தேவை.
 
இனி இன்றைய சந்தையின் தடை நிலை
 
5395--5404--5427--5439--5447
 
முக்கிய தாங்கு நிலை
 
5360--5342--5331--5317--5301  

Thursday, July 15, 2010

15 வியாழன் ஜூலை 2010

நேற்றைய சந்தையில் 5466 to 5471 நிலைகளை மீள முடியாமல் போனதில் குறுகியகால நோக்கில் சந்தைக்கு பின்னடைவே.

கடந்த பன்னிரண்டு தினங்களில் மட்டும் FII களின் சுமார் 4353 கோடி ரூபாய் முதலீடு..

இன்று 5434 நிலைகளுக்கு மேல் சந்தை உயரும் பட்சத்தில் நேற்றைய உயரத்தை எட்டிடும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இனி இன்றைய சந்தையின் தடை நிலை

5390--5404--5424--5440--5467

முக்கிய தாங்கு நிலை

5370--5356--5343--5331--5320


















.

Wednesday, July 14, 2010

14 புதன் ஜூலை 2010

தவிர்க்க இயலாத காரணத்தினால் நேற்றைய பதிவினை  வலை ஏற்றிட இயலவில்லை புரிந்துணர்வுக்கு நன்றி.....
 கடந்த ஜூன் மாதம் நாம் குறிப்பிட்டிருந்த மிட்கேப்,உலோகத்துறை மற்றும் வங்கித்துறை பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களது லாபங்களின் ஒரு பகுதியை உறுதி செய்திடலாம்.   

இன்றைய சந்தையில் 5466 to 5471 நிலைகளில் கவனம் தேவை, இந்த நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் selling pressure உருவாகும் வாய்ப்பிருக்கிறது கவனம் தேவை.



                                          இனி இன்றைய சந்தையின் தடை நிலை
                                                               
                                                        5428--5444--5458--5470--5493

                                                           முக்கிய தாங்கு நிலை

                                                         5390--5376--5356--5346--5330

Monday, July 12, 2010

12 திங்கள் ஜூலை 2010

சென்ற வாரத்தின் FII களின் நம்பிக்கை அளிக்கும் விதமான சுமார் 2132  கோடி ரூபாய் முதலீடு!! வாரத்தின் உயர்நிலைகளுக்கு அருகாமையிலான சந்தையின் முடிவுநிலை, என நம்பிக்கை தரும்  விதமான கடந்த வார சந்தை.


வரும் நாட்களில் 5388 நிலைகளுக்கு மேல் சந்தை முடிவுறும் பட்சத்தில் கடந்த ஜூன் 22 ம் தேதி நாம் குறிப்பிட்டிருந்த 5541 நிலைகளை எட்டிடும் வாய்ப்பை எதிர் பார்க்கிறேன்.


கடந்த ஜூலை 1 ம் தேதி நாம் குறிப்பிட்டிருந்த ICICI BANK முதல் இலக்கான 884 ஐ இன்று அடைந்திடும்    வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.. .


                                                
                                        இனி இன்றைய சந்தையின் தடை நிலை


                                                         5363--5388--5403--5418--5468 
                                                  

                                                        முக்கிய தாங்கு நிலை

                                                     5347-- 5336--5320--5308--5290

Friday, July 9, 2010

09 வெள்ளி ஜூலை 2010

நேற்றைய உயரம் தக்கவைக்க முடியாமல் போனதில் சந்தைக்கு சிறிதொரு பின்னடைவே.கவலை அளிக்கும் விதமான  குறைவான வால்யூம் கொண்ட  வர்த்தகம்..


இன்று தேசிய நிஃப்டி 5321 நிலைகளுக்குமேல் முடிவுறும் பட்சத்தில் வரும் நாட்களில் 5351முதல் 5387 வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன்.

வர்த்தக செய்தி

நாட்டின் தொழில்துறை உற்பத்தி சிறப்பாக இருப்பதால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளது.

                                          இனி இன்றைய சந்தையின் தடை நிலை

                                                        5313--5321--5336-5349-5367

                                                        முக்கிய தாங்கு நிலை

                                                       5287--5278--5265--5250--5234

Thursday, July 8, 2010

08 வியாழன் ஜூலை 2010

தொடரும் குறைவான வால்யூம். தினவர்த்தகர்களுக்கு பெரிய வர்த்தக வாய்ப்புகள் இல்லை.Gapup Gapdown என மாறி மாறி எரிச்சலை தரும் சந்தைகள்.

தேசிய நிஃப்டி கீழே 5196, மற்றும் மேலே 5310 நிலைகளை கடக்காத வரையில் தற்போதைய மந்த நிலமைதான் தொடரும் என எதிர் பார்க்கிறேன்.

வர்த்தக செய்தி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த நிதி ஆண்டில் உரிமை பங்குளை வெளியிட்டு ரூ.20 ஆயிரம் கோடி. திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதிஆண்டின் கடைசி மாதங்களில் உரிமை பங்கு வெளியிடப்படும். என வங்கி சேர்மன் ஓ.பி.பட் தெரிவித்துள்ளார்.


இனி இன்றைய சந்தையின் தடை நிலை
5252--5266--5279--5293--5318

முக்கிய தாங்கு நிலை
5228--5217--5201--5189--5166

Wednesday, July 7, 2010

07 புதன் ஜூலை 2010


நேற்றைக்கு குறைவான வால்யூம் உடன், தேசிய நிஃப்டி 5278 நிலைகளை கடந்திருக்கிறது. வங்கித்துறை மற்றும் உலோக துறை பங்குகளினால் இந்த உயர்வு ஏற்பட்டது.

சர்வதேச சந்தைகளின் போக்கு கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது. இருந்த போதிலும் நமது சந்தைகளின் செயல்பாடு நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது.


கீழே இருக்கும் படம் தேசிய நிஃப்டியின் தினசரி சார்ட். நுட்ப ஆய்வுகளின் படி, எலியட் வேவ் தியரி மற்றும் தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டரின் அழகிய அமைப்புகள் உருவாகி இருப்பதை கவனியுங்கள்.



இத்தகைய சூழலில் உலக சந்தைகள் ஒத்துழைக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் 5400 நிலைகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீண்ட கால இலக்காக 5942 நிலையை நோக்கி சந்தை நகரும் என எதிர் பார்க்கிறேன்.
..

இனி இன்றைய சந்தையின் தடை நிலை

5301--5321--5337--5349--5363


முக்கிய தாங்கு நிலை

5280--5269--5253--5236--5221

Tuesday, July 6, 2010

06 செவ்வாய் ஜூலை 2010


தொடர்ச்சியான பக்கவாட்டு நகர்வுகள்..,தினவர்த்தகர்களின் பொறுமையை சோதித்து பார்க்கும் சந்தை.., கீழ் நிலையில் 5196 மேல் நிலையில் 5278 உடை படாத வரை இதே நிலை நீடிக்கும் வாய்ப்பை எதிர்பார்கிறேன்..,


வரும் நாட்களில் 5196 கீழ் நழுவும் பட்சத்தில் மிக முக்கிய நிலையாக 5141 முதல் 5086 வரை எதிர்பார்கிறேன்.. 5278 நிலைகளுக்குமேல் முடிவுறும்பட்சத்தில் புதியதொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்  இலக்காக 5328 5387 நிலைகளை எதிர்பார்கிறேன்.


வரும் நாட்களில் நிறுவனங்களின் வர்த்தக செய்தியை பகிர்ந்து  கொள்ள எண்ணி இருக்கிறேன்..,

இனி இன்றைய சந்தையின் தடை நிலை

5241--5253--5270--5283--5301

முக்கிய தாங்கு நிலை

5221--5204--5196--5178--5163

Monday, July 5, 2010

05 திங்கள் ஜூலை 2010

தவிர்க்க இயலாத காரணத்தினால் சந்தையின் எனது பார்வையை இன்று வலை ஏற்ற
இயலவில்லை மன்னிக்கவும் புரிந்துணர்வுக்கு நன்றி ....நாளை வழக்கம் போல் தொடரும்...

Friday, July 2, 2010

02 வெள்ளி ஜூலை 2010

நேற்றைய சந்தை தின வர்த்தகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்தது இன்றும் அதே நிலை தொடரலாம்..மேல் நிலையில் 5278 கீழ் நிலையில் 5204 to 5183 உடைபடாதவரை பக்கவாட்டு நகர்வுகளே தொடரும்

இந்நிலைகள் உடைபடும் வரை தின வர்த்தகர்கள் வேடிக்கை பார்ப்பது தவிர வேற வழி ஏதும் இல்லை.. வாரத்தின் இறுதி வர்த்தக தினம் மேல் நிலையில் 5278 உடைபடாமல் போகும் பட்சத்தில் ஒரு selling pressure உருவாகலாம் கவனம் தேவை...


முதலீட்டாளர்கள் BHEL நிறுவன பங்கில் கவனம் செலுத்தலாம்..


சந்தையின் இன்றைய முக்கிய தடை நிலை

5263--5278--5291--5309--5330


முக்கிய தாங்கு நிலை

5241--5225--5204--5183--5156

Thursday, July 1, 2010

01 ஜூலை வியாழன் 2010

ஜூலை மாதத்தின் முதல் வர்த்தக நாள் ..கடந்த வாரம் நாம் குறிப்பிடிருந்த நிலை தொட்டு நல்லதொரு உயர்வு..வரும் ஜூலை மாதத்தின் முக்கிய நிலை 5202 5108 ஒவ்வொரு பின்னடைவையும் வர்த்தக வாய்ப்பாக அணுகலாம்.

இந்த மாதம் வங்கித்துறை பங்குகளில் கவனம் செலுத்தலாம்

முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு..,

ICICIBANK..ஐ 852 to 834 நிலைகளில் வாங்கலாம், இலக்காக
884 --910-- 957 வரை எதிர்பார்க்கிறேன்..

இன்றைய முக்கிய நிலை 5278-- 5329

சந்தையின் இன்றைய முக்கிய தடை நிலை
5325--5337--5350--5365--5387

முக்கிய தாங்கு நிலை
5294--5278--5265--5252--5236