Wednesday, July 7, 2010

07 புதன் ஜூலை 2010


நேற்றைக்கு குறைவான வால்யூம் உடன், தேசிய நிஃப்டி 5278 நிலைகளை கடந்திருக்கிறது. வங்கித்துறை மற்றும் உலோக துறை பங்குகளினால் இந்த உயர்வு ஏற்பட்டது.

சர்வதேச சந்தைகளின் போக்கு கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது. இருந்த போதிலும் நமது சந்தைகளின் செயல்பாடு நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது.


கீழே இருக்கும் படம் தேசிய நிஃப்டியின் தினசரி சார்ட். நுட்ப ஆய்வுகளின் படி, எலியட் வேவ் தியரி மற்றும் தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டரின் அழகிய அமைப்புகள் உருவாகி இருப்பதை கவனியுங்கள்.



இத்தகைய சூழலில் உலக சந்தைகள் ஒத்துழைக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் 5400 நிலைகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. நீண்ட கால இலக்காக 5942 நிலையை நோக்கி சந்தை நகரும் என எதிர் பார்க்கிறேன்.
..

இனி இன்றைய சந்தையின் தடை நிலை

5301--5321--5337--5349--5363


முக்கிய தாங்கு நிலை

5280--5269--5253--5236--5221

No comments:

Post a Comment